இடுகைகள்

இறை வணக்கம்

படம்
               கவி எண் ; 002  (  1973 ஜனவரி )                              இறை வணக்கம்       எல்லாம் வல்ல தெய்வமது;  எங்கும் உள்ளது நீக்கமற; சொல்லால் மட்டும் நம்பாதே;  சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்!  வல்லாய் உடலில் இயக்கமவன்;  வாழ்வில் உயிரில் அறிவுமவன்;  கல்லார் கற்றார் செயல் விளைவாய்க் காணும் இன்ப துன்பமவன். அவனின் இயக்கம் அணுவாற்றல்,  அணுவின் கூட்டுப் பக்குவம் நீ!  அவனில்தான் நீ! உன்னில் அவன்!  அவன்யார்? நீயார்? பிரிவேது? அவனை மறந்தால் நீ சிறியோன்;  அவனை அறிந்தால் நீ பெரியோன்;  அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம், அறிவு முழுமை அது முக்தி ! அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

ஞானக்களஞ்சியம் தொகுதி 1

படம்
வாழ்க வையகம்           வாழ்க வளமுடன்                                 இறை வணக்கம் ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சிபெற்று, அணுவென்ற உயிராகி, அணுக்கள் கூடி, மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப, மூலகங்கள் பலவாகி, அவை இணைந்து, பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும் பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி, நீதிநெறி உணர் மாந்தராகி, வாழும் நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.